வெளுத்து வாங்கும் கனமழை... 4 மாவட்டங்களுக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு...!


வெளுத்து வாங்கும் கனமழை... 4 மாவட்டங்களுக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு...!
x

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 4 மாவட்டங்களிலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி, 30,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

நெல்லை மாவட்ட மக்கள் 0462-2501012 என்ற எண்ணிலும்,

தூத்துக்குடி மாவட்ட மக்கள் 0461-2340101 என்ற எண்ணிலும்,

குமரி மாவட்ட மக்கள் 04652-231077 என்ற எண்ணிலும்,

தென்காசி மாவட்ட மக்கள் 04633-290548 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாவட்ட மக்களும் 1070,1077 போன்ற அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்களையும் அவசர உதவிக்கு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9445869848 என்ற வாட்சப் எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story