ஆசிரியை செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பியது யார்?


ஆசிரியை செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பியது யார்?
x

உளுந்தூர்பேட்டை அருகே ஆசிரியை செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பியது யார்? போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போனுக்கு வெளி மாநில செல்போன் நம்பரில் இருந்து மர்ம நபர் ஒருவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த ஆசிரியை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியைசெல்போன் நம்பருக்கு ஆபாச புகைப்படம் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிய வெளிமாநில மர்ம நபர் யார்? உள்ளூர் நபர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story