'கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடியது ஏன்?' - தமிழக அரசுக்கு எல்.முருகன் கேள்வி


கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடியது ஏன்? - தமிழக அரசுக்கு எல்.முருகன் கேள்வி
x

தி.மு.க. அரசு தோல்வியுற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது என எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை,

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை அவசர அவசரமாக திறக்க காரணம் என்ன? என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க முடியவில்லை என்றால், நாட்டை ஆள்வதற்கு தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை. கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம். அதை ஏன் மூட வேண்டும்? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஏன் அவசரமாக திறக்க வேண்டும்? பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க முடியாத தி.மு.க. அரசு தோல்வியுற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Next Story