நடராஜர் பற்றி அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - எச்.ராஜா
கனல்கண்ணனை கைது செய்த போலீசார் கடவுள் நடராஜர் பற்றி அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
ராஜபாளையம்.
ராஜபாளையத்தில் விசுவ இந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழாவை இன்று கொண்டாட பொன்விழா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் போலீஸ் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராஜபாளையம் வந்த பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா, இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைதான் நடைபெறுகிறது.
கடவுள் நடராஜரை அவதூறாக பேசி யூ-டியூப்பில் பதிவிட்டவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு எதிராக கருத்து தெரிவித்த கனல் கண்ணனை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
Related Tags :
Next Story