சேலத்தில் பரவலாக மழை


சேலத்தில் பரவலாக மழை
x
சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தலைவாசல், தம்மம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை சிறிது நேரமே நீடித்தது. பின்னர் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இரவில் குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 17 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தம்மம்பட்டி-12, ஆத்தூர்-7, பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் கெங்கவல்லி-6, கரியகோவில்-2.

1 More update

Next Story