ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 90 மில்லி மீட்டர் பதிவு


ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை  அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 90 மில்லி மீட்டர் பதிவு
x

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் வெயில் வாட்டி எடுத்தது. இரவு 8 மணி அளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 12 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக அங்கு தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அம்மாபேட்டை -90, கொடுமுடி -57, கவுந்தப்பாடி -22, மொடக்குறிச்சி -21, வரட்டுபள்ளம் -21, ஈரோடு, பவானி -15, கோபி -9.4, குண்டேரிபள்ளம் -7.6, பெருந்துறை -7, கொடிவேரி -6.2, தாளவாடி -6, சென்னிமலை -4, பவானிசாகர் -3.2, சத்தியமங்கலம் -3.


Next Story