மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு

நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையபாளையம், கெடாரை, எம்மாம்பூண்டி, கொன்னமடை, சூரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மதியம் 2 மணி வரை வெயில் சுட்டெரித்தது. அதன்பின்னர் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1½ மணி நேரம் நிற்காமல் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு அடுத்துள்ள சோலார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மதியம் 3.30 மணி வரை வெயில் வாட்டி எடுத்தது. அதன்பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. பிறகு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் நிற்காமல் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சோலாரை அடுத்த வெண்டிபாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்தது. ஈரோட்டிலும் மழை பெய்தது. இதனால் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


Related Tags :
Next Story