நள்ளிரவில் பரவலாக மழை


நள்ளிரவில் பரவலாக மழை
x

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வளத்தியில் 76 மி.மீ. மழை பதிவானது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கி மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும், மேல்மலையனூர், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவிலும் நீடித்த இந்த மழையானது நேற்று அதிகாலை 5 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. விழுப்புரத்தில் பெய்த மழையால் நகராட்சி மைதானம், பழைய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. அதனை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

செஞ்சி

இதேபோல் செஞ்சியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை விட்டு விட்டு நேற்று காலை 9 மணி வரை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் பள்ளி மாணவ-மாணவிகள் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.

மேலும் பல்வேறு இடங்களில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியது. இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் மழையில் நனைந்தபடி நேரில் சென்று வாய்க்கால் அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் சரிசெய்து தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வளத்தியில் 76 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


Related Tags :
Next Story