திருமருகல் பகுதியில் பரவலாக மழை
திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், எரவாஞ்சேரி, மருங்கூர், புத்தகரம், ஏனங்குடி, திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பருத்தி செடிகள் நனைந்து பஞ்சு சேதமடையும் நிலை உள்ளது. . பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர் மற்றும் உளுந்து, பயறு சேதமடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. தற்போது ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து பருத்தி சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பருத்தி பஞ்சு நனைந்து நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story