கூடலூர் பகுதியில் பரவலாக மழை:தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பு-உரிய விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
கூடலூர் பகுதியில் பரவலாக மழை பெய்தால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கட்டுப்படியான விலை வழங்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் பரவலாக மழை பெய்தால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கட்டுப்படியான விலை வழங்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வறட்சியால் விளைச்சல் பாதிப்பு
கூடலூர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஏற்பட்ட வறட்சியால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. தொடர்ந்து வனவிலங்குகள் மட்டுமின்றி பொதுமக்களும் வறட்சியால் சிரமம் அடைந்தனர். மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தேயிலை, காபி, குறுமிளகு உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் பாதித்தது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அடியோடு குறைந்தது. இதனால் தேயிலை தூள் உற்பத்தியும் பரவலாக குறைந்தது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பச்சை தேயிலை விளைச்சல் அதிகரிப்பு
இதனால் வறட்சியின் தாக்கம் குறைந்துள்ளது. தொடர்ந்து வனப் பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. இதேபோல் தேயிலைத்தோட்டங்களிலும் நிலத்தின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளது.
இது குறித்து சிறு விவசாயிகள் கூறியதாவது:-
கோடை காலத்தில் பச்சை தேயிலை விளைச்சல் பாதித்தது. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தியும் குறைந்தது. வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விளைச்சல் இல்லாத காரணத்தால் வருவாய் குறைந்தது. தற்போது பரவலாக மழை பெய்வதால் தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து பச்சை தேயிலை விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் செலவினங்களுக்கு ஏற்ப பச்சை தேயிலுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயித்தால் வருவாய் கிடைக்கும். எனவே விவசாயிகளுக்கு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.