கணவனை கத்தியால் குத்திய மனைவி கைது


கணவனை கத்தியால் குத்திய மனைவி கைது
x

மூன்றடைப்பு அருகே கணவனை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகில் உள்ள மருதகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் இசக்கியப்பன் (வயது 44). இவருக்கும், இவரது மனைவி இசைவேணிக்கும் (40) திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன் சூரத்தில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ஊருக்கு வந்திருந்த இசக்கியப்பனுக்கு, இசைவேணி நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இசைவேணி தனது கணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்தத அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இசைவேணியை கைது செய்தார்.


Next Story