தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு தீர்ப்பு


தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு தீர்ப்பு
x

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்துவிட்டு கணவனை காணவில்லை என்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே கடந்த 2021-ம் ஆண்டு பாண்டித்துரை என்பவருக்கும் நந்தினி என்பவருக்கும் திருமணமாகி உள்ளது. திருமணமாகி 88 நாட்களே ஆன நிலையில், மற்றொருவருடன் ஏற்பட்ட தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை நந்தினி கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு, அவரை காணவில்லை என்று நாடகமாடி உள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், துருவி துருவி விசாரித்ததில், நந்தினி உண்மையை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து கணவரை கொலை செய்த மனைவி நந்தினியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கோர்ட்டு, நந்தினிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஏழு ஆண்டு கால சிறை தண்டனையுடன் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1 More update

Next Story