காட்டு பன்றிகள் அட்டகாசம்


காட்டு பன்றிகள் அட்டகாசம்
x

களக்காடு அருகே காட்டு பன்றிகள் அட்டகாசம்; வாழைகள் சேதம்

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் பரிசுகொடுத்தான்பத்தில் சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலையில் காட்டு பன்றிகள் கூட்டம் பரிசுகொடுத்தான்பத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை தின்றும், சாய்த்தும் சேதப்படுத்தின. இதனால் 200-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகியது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பன்றிகளிடமிருந்து வாழைகளை பாதுகாக்க விவசாயிகள் விளைநிலங்களை சுற்றிலும் வலை கட்டியுள்ளனர். ஆனாலும் பன்றிகள் வலைகளை கிழித்து விட்டு விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. காட்டு பன்றிகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், காட்டு பன்றிகளை விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story