கிணத்துக்கடவு அருகே 500 வாழைக்கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்


கிணத்துக்கடவு அருகே 500 வாழைக்கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே 500 வாழைக்கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் கனகராஜ் என்ற விவசாயி தோட்டத்தில் 6 மாதத்திற்கு முன்பு நேந்திரம் வாழை பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த வாழை கன்றுகளை நள்ளிரவில் வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றிகள் கடித்துக் குதறி சேதப்படுத்தியது. இதுகுறித்து காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி குளம் கரை பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் உள்ளன. இந்த காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் தோட்டத்திற்குள் கும்பலாக புகுந்து வாழை மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கட்டுப்படுத்த வனத்துறையினர் கண்காணித்து இந்த காட்டுப் பன்றிகளை பிடிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் நுழையாதவாறு மின்வேலி அமைக்க வனத்துறையினர் அனுமதி தர வேண்டும். தற்போது 500 வாழைக்கன்றுகள் கோடங்கிபாளையத்தில் மட்டும் சேதமடைந்துள்ளது. விவசாயிக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story