ஆழியாறு அணை பகுதியில் காட்டு யானை முகாம்
ஆழியாறு அணை பகுதியில் காட்டு யானை முகாம் முகாமிட்டு இருந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. வண்ணத்துப்பூச்சி பூங்கா, சின்னாறுபதி பகுதியில் நின்ற அந்த காட்டு யானை நவமலைக்கு சென்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நவமலையில் இருந்து மீண்டும் சின்னாறுபதிக்கு வந்த யானை அங்கிருந்த கூந்தை பனையை சாப்பிட்டது.
பின்னர் தண்ணீரில் நீச்சல் அடித்தபடி அணையில் உள்ள பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகைக்கு வந்தது. மேலும் அன்பு நகரில் ஒரு வீட்டின் முன்பு நின்ற மரத்தில் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகு மீண்டும் யானை ஆழியாறு ஆய்வு மாளிகைக்கு பின்புறம் வந்து நின்றது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே யானை நிற்கும் தகவல் அறிந்த பொதுமக்கள் பலர் பொள்ளாச்சி- வால்பாறை ரோட் டில் திரண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட் டது. யானை தொடர்ந்து இரவு 7 மணி வரை அங்கேயே முகாமிட்டு இருந்தது.
இதன் காரணமாக ஆழியாறு ஆய்வு மாளிகை, அறிவுத் திருக்கோ வில், அன்பு நகர் என 3 இடங்களில் வனத்துறையினர் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.