வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுயானை


வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுயானை
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுயானை இறந்து கிடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுயானை இறந்து கிடந்தது.

காட்டுயானை சாவு

வால்பாறை அருகே காடம்பாறையில் அமைந்துள்ள கீழ்பூணாச்சி வனப்பகுதியில் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, ஏதேனும் வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா? என தேடுதல் பணி மேற்கொண்டனர். அதில் ஆண் காட்டு யானை ஒன்று உடல் முழுவதும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராகவன் இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

பள்ளத்தில் விழுந்து...

இதையடுத்து வனத்துறையினர் கூறியதாவது:-

இறந்து கிடந்த ஆண் யானையின் உடலில் இருந்து 2 தந்தங்கள் மீட்கப்பட்டது. இறந்து கிடந்த ஆண் யானைக்கு வயது 37 முதல் 42 வரை இருக்கும். பெண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில் உயரமான இடத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்ததால் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு யானை இறந்திருக்கலாம். யானை இறந்து கிடந்த இடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததால் மற்ற வனவிலங்குகள் சாப்பிடுவதற்காக யானையின் உடல் வனப்பகுதியில் விடப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story