காட்டு யானைகள் அட்டகாசம்


காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாற்றுக்கு செல்லும் பகுதிகளில் பல ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளது. அதில் விவசாயிகள் வாழை, மா, தென்னை, நெற்பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வப்போது காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையநல்லூர் பீட் கல்லாறு பகுதிகளில் விவசாயி கிட்டு ராஜா விளை நிலங்களை சுற்றிலும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் போகாமல் இருக்க வேலி அமைத்துள்ளார். ஆனால் யானைகள் பிரதான நுழைவு கேட்டை கீழே தள்ளி தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாழை, தென்னை ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றன. விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்கும் விதத்தில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் நேரத்தில் காட்டு விலங்கிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக துப்பாக்கி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story