காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்


காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள கருத்தபிள்ளையூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 123 தென்னை மரங்களை காட்டு யானைகள் பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் தாமஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள், 15 தென்னை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தின.

மேலும் அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து 5 தென்னை மரங்களை பிடுங்கியது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story