குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்


குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
x
தினத்தந்தி 2 July 2023 3:30 AM IST (Updated: 2 July 2023 3:31 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி


பந்தலூர்


பந்தலூர் அருகே பிதிர்காடு, கைவட்டா, சந்தகுன்னு, முக்கட்டி, நெலாக்கோட்டை, விலங்கூர், பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிதிர்காடு கைவட்டா பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள குடியிருப்புகளை முற்றுகையிட்டன. அங்கு தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. நேற்று காலை 9 மணியளவில் கைவட்டா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானை புகுந்தது. அங்கு தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களை துரத்தியது. இதனால் அச்சம் அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாட்டவயல் பகுதியில் இருந்து கூடலூர், பந்தலூர் சென்ற வாகனங்களை யானை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், பெலிக்ஸ், வனகாப்பாளர்கள் மில்டன் பிரபு, மணி, பொம்மன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


இதேபோல் மழவன் சேரம்பாடி, கோட்டப்பாடி, பால்வாடி லைன்ஸ் பகுதிகளில் உள்ள வீடுகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.



Next Story