சத்துணவு கூடத்தை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
சத்துணவு கூடத்தை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
கோயம்புத்தூர்
வால்பாறை
கேரள மாநிலம் சாலக்குடி வனப்பகுதியில் இருந்து வால்பாறை வனப்பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர தொடங்கி உள்ளன. இந்த நிலையில் குட்டிகளுடன் 8 காட்டுயானைகள் கொண்ட கூட்டம், நேற்று நள்ளிரவில் உருளிக்கல் எஸ்டேட் பெரியகடை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் புகுந்தன.
தொடர்ந்து சத்துணவு கூடத்தின் சுவரை உடைத்து அட்டகாசம் செய்தது.ஆனால், உள் அறையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததால், அவை தப்பின. எனினும் காட்டுயானைகள், அருகில் இருந்த கழிப்பிட கதவை உடைத்து சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்கு சென்றன.
Related Tags :
Next Story