வீட்டின் சுவரை உடைத்த காட்டு யானைகள்


வீட்டின் சுவரை உடைத்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 4 Sept 2023 1:15 AM IST (Updated: 4 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே வீட்டின் சுவரை உடைத்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடி பகுதிக்குள் நேற்று அதிகாலை 2 குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டது. பின்னர் தோட்டங்களுக்குள் புகுந்து வாழை மற்றும் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. காட்டு யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சிவபிரசாத் என்பவரது வீட்டு முன்பு இருந்த சுவரை யானைகள் உடைத்தன. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானைகள், அய்யன்கொல்லி-பந்தலூர் சாலையில் வாகனங்களை வழிமறித்தன. தகவல் அறிந்த சேரம்பாடி, பிதிர்காடு வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானைகளை விரட்டினர். இதேபோல் தட்டாம்பாறையில் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. அங்கிருந்த மின்கம்பத்தை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து அய்யன்கொல்லி மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story