வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம் -தொழிலாளர்கள் அச்சம்


வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம் -தொழிலாளர்கள் அச்சம்
x

வால்பாறை அருகே பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.

6 யானைகள்

வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகஅளவில் உள்ளது. .இதனால் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அனைத்து எஸ்டேட் பகுதி மக்களும் இரவு நேரத்திலும் அதிகாலை நேரத்திலும் பணிக்காக வெளியே செல்லும் போது கவனமாக இருந்து யானைகள் நடமாட்டம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் வால்பாறை அருகில் உள்ள தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் குட்டியுடன் 6 காட்டு யானைகள் முகாமிட்டு நின்றது.

பணிகள் பாதிப்பு

இந்த யானைகள் தேயிலை தோட்ட பகுதியில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததால் அந்த பகுதியில் தேயிலை இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்களும் அச்சம் அடைந்து உள்ளனர். தொழிலாளர்கள் அருகில் உள்ள வேறு தோட்ட பகுதியில் பணியை மேற்கொண்டனர். கேரள வனப்பகுதிக்குள்ளிருந்து வந்து கொண்டிருக்கும் யானைகள் வனப் பகுதிக்குள் செல்வதற்காக தேயிலை தோட்டங்கள் வழியாகத்தான் சென்று வருகிறது. மேலும் பகல் நேரத்தில் பனிமூட்டமும் நிலவி வருகிறது.

சிவப்பு விளக்கு எச்சரிக்கை

இதனால் யானைகள் நின்றால் தெரியாது. எனவே எஸ்டேட் நிர்வாகத்தினர் காலையில் தொழிலாளர்களை பணிக்காக தேயிலை தோட்டங்களுக்கு அனுப்புவதற்கு முன் அந்த பகுதியில் பணியில் உள்ள வனப் பணியாளர்களை தொடர்பு கொண்டு காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கேட்டறிந்து பின்னர் பணிக்கு அனுப்ப வேண்டும்.

அதேபோல் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள எஸ்டேட் பகுதியில் இயற்கை வன வள பாதுகாப்பு மையத்தின் மூலம் இரவில் சிவப்பு விளக்கு ஒளிரச் செய்யப்பட்டு வருகிறது. அவற்றையும் கருத்தில் கொண்டு எஸ்டேட் பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story