தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
கொடைக்கானலில் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகள் உருளைகிழங்கு விதைகளை நாசமாக்கியது.
திண்டுக்கல்
கொடைக்கானல் மேல்மலை பகுதியான கூக்கால் கிராமம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டு விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் கனகனம் பாறை அருகே பொன்ராம் என்பவர் தோட்டத்திற்குள் காட்டுயானைகள் புகுந்தன. அவை அங்கு வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான உருளைக்கிழங்கு விதை மூட்டைகளை தூக்கி எறிந்து நாசப்படுத்தின. மேலும் வீட்டையும் இடித்து சேதப்படுத்தின. இதற்கிடையே பொன்ராம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. எனவே கூக்கால் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story