தென்னைகளை சாய்க்கும் காட்டு யானைகள்


தென்னைகளை சாய்க்கும் காட்டு யானைகள்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்னைகளை காட்டு யானைகள் சாய்த்து வருகின்றன.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் பனம்பழங்களை தின்ன வலம் வருகின்றன. பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கும் திடீரென வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இங்கு முகாமிட்டு இருக்்கும் யானைகள் கூட்டமாக இரவு நேரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன் தென்னைகளையும் சாய்த்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி அழகர்சாமி கூறுகையில், "மலை அடிவார பகுதிகளில் சில நாட்களாக யானைகள் கூட்டமாக வருகின்றன. இந்த யானைகள் தென்னந்தோப்புக்குள் தென்னைகளை சாய்த்து சென்றுள்ளன. தொடர்ந்து இந்த பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் இருப்பதால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சேதம் அடைந்த பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.


Related Tags :
Next Story