காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கடையநல்லூர் பீட், மேக்கரை பீட் வடகரை ஆகிய பகுதிகளில் தென்னை, வாழை, மா பயிரிட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் யானைகள் தென்னந்தோப்பில் புகுந்து ஏராளமான தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியது. மேலும் பாசன வசதிக்காக போடப்பட்டுள்ள மோட்டார் பம்பு செட்டுகளையும், பைப்லைன்களையும் சேதமாக்கியது. இதுகுறித்து விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர்கள் அம்பலவாணன், முருகேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக விரைந்து வந்தனர். விவசாயிகளுடன் இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டு வெடி வெடித்து யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.
Related Tags :
Next Story