குட்டிகளுடன் உலா வரும் காட்டுயானைகள்


குட்டிகளுடன் உலா வரும் காட்டுயானைகள்
x
தினத்தந்தி 25 May 2023 12:45 AM IST (Updated: 25 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு-வால்பாறை சாலையோரத்தில் குட்டிகளுடன் காட்டுயானைகள் உலா வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு-வால்பாறை சாலையோரத்தில் குட்டிகளுடன் காட்டுயானைகள் உலா வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆழியாறு வனப்பகுதி

பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியாறு வனப்பகுதி மிகவும் ரம்மியமான இயற்கை எழில் சூழ்ந்தது ஆகும். இங்கு யானை, புலி, மான், வரையாடு, காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன.

தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால் வனப்பகுதியில் செடி, கொடிகள், மரங்கள் காய்ந்து உள்ளதோடு, தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு அவ்வப்போது வெளியேறி வருகிறது.

யானை கூட்டம்

இந்த நிலையில் ஆழியாறு-வால்பாறை சாலையோரத்தில் கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக குட்டிகளுடன் உலா வருகிறது. கோடை விடுமுறையில் ஆழியாறு அணை, பூங்கா மற்றும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் யானை கூட்டத்தை கண்டு செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் ஆர்வமிகுதியில் வனவிலங்குகளின் மிக அருகில் சென்று புகைப்படங்களை எடுக்கின்றனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆபத்தை உணராமல் அலட்சியமாக சுற்றுலா பயணிகள் செயல்படக்கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுத்தல், தின்பண்டம் கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. இதனை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story