வால்பாறையில் பயன்படாத பஸ் நிலைய வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


வால்பாறையில் பயன்படாத பஸ் நிலைய வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பயன்படாத பஸ் நிலைய வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பயன்படாத பஸ் நிலைய வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

பயன்படாத நிலையம்

வால்பாறை பகுதியில் அரசு போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கும், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அமைப்பதற்கும் இடம் தேடும் பணி தொடங்கி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இடம் கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை வாழைத் தோட்டம் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலைய வளாகம் பல ஆண்டுகளாக பயன்படாத நிலையில் இருந்து வருகிறது. எந்த ஒரு அரசு பஸ்களும் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் பஸ் நிலையத்தை பயன்படுத்துவதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகள் பராமரிப்பு பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. இதனால் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு வெளியில் சாலையில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலகம்

எனவே பயன்படாத நிலையில் இருக்கும்அரசு போக்குவரத்து கழக பஸ் நிலைய வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டால் வால்பாறை பகுதி பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்து தகுதி சான்று வழங்குவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற வாகனங்களை ஓட்டிக் காண்பிப்பதற்கும் வசதியாக இருக்கும்.

இல்லை என்றால் அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையில் உரிய பராமரிப்பு செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story