லெட்சுமாங்குடியில் ஒரு வழிபாதை அமைக்கப்படுமா?


லெட்சுமாங்குடியில் ஒரு வழிபாதை அமைக்கப்படுமா?
x

லெட்சுமாங்குடியில் ஒரு வழிபாதை அமைக்கப்படுமா?

திருவாரூர்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த லெட்சுமாங்குடியில் ஒரு வழிபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து ெநரிசல்

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி சாலை என்பது பிரதான போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. மேலும் திருவாரூர், மன்னார்குடி, சென்னை, கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை போன்ற முக்கிய நகர பகுதிகளை இ்ணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில் லெட்சுமாங்குடி கடைவீதி சாலை பல ஆண்டுகளாக மிகவும் குறுகலான சாலையாக இருந்து வருகிறது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதாக சென்று வர முடியாமல் அப்படியே ஸ்தம்பித்து பல மணி நேரம் நின்று விடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவசர நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ், பள்ளி கல்லூரிகள் செல்லும் வாகனங்கள் உள்பட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த லெட்சுமாங்குடியில் ஒரு வழி பாதை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஒருவழி பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு வழிபாதை அமைக்க ேவண்டும்

இதுகுறித்து லெட்சுமாங்குடியை சேர்ந்த மோகன் கூறுகையில்,

லெட்சுமாங்குடி கடைவீதி சாலை பல ஆண்டுகளாக குறுகலான சாலையாகவே இருந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் வாகனங்கள் மட்டும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த காலங்களில் இந்த குறுகலான சாலை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் வாகனங்கள் அதிகரிப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தால் குறுகலான சாலை மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால், அதற்கேற்றவாறு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏதுவாக ஒரு வழி பாதை அமைத்து தரலாம். ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால், லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசல் தொடருகின்றது. இதனால், அவசர நோயாளிகள், அவசரமாக வேலைக்கு சென்று வருவோர், கடைவீதி செல்வோர், பள்ளி மாணவர்கள் உட்பட பொது மக்கள் அனைவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒரு வழி பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வாகன ஓட்டிகள் சிரமம்

கூத்தாநல்லூரை சேர்ந்த நூர்முகமது கூறுகையில், லெட்சுமாங்குடி கடைவீதி குறுகலான சாலை என்றாலே வாகன ஓட்டிகள் பதறுகின்றனர். அந்த குறுகலான சாலையில் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்லும் போது பெரிய அளவில் பதற்றம் ஏற்படுகிறது. கடந்து செல்ல முற்படும்போது வாகனங்கள் மோதிக் கொள்ளுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இதனால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிரமம் அடைவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் வயதானவர்கள், நோயாளிகள், பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே லெட்சுமாங்குடியில் ஒரு வழி பாதை அமைப்பதே நல்ல தீர்வாகும் என்றார்.


Related Tags :
Next Story