சீர்காழி, கும்பகோணத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?


சீர்காழி, கும்பகோணத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு வழியாக சீர்காழி, கும்பகோணத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு வழியாக சீர்காழி, கும்பகோணத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பஸ் வசதி இல்லை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வழியாக சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களும், மணல்மேடு வழியாக பந்தநல்லூர், திருப்பனந்தாள், கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களும் பஸ் வசதி இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

மணல்மேடு மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையின்படி மணல்மேட்டில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் மணல்மேட்டில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் மணல்மேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றுப்பாலம்

மணல்மேட்டில் இருந்து பலர் வெளியூர்களில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கும் சென்று வருகின்றனர். அதே போன்று அரசு துறை, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோரும் பஸ் போக்குவரத்தை நம்பி உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட முட்டம் பாலம் வழியாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ளவர்கள் மயிலாடுதுறை செல்வதற்கும் மயிலாடுதுறையில் உள்ளவர்கள் நெய்வேலி, பண்ருட்டி, சென்னை செல்லவும் மணல்மேடு வழித்தட பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்

ஆனால் மணல்மேடு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை மட்டும் மிக மிக குறைவாக உள்ளது. இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் மணல்மேட்டில் இருந்து சீர்காழி, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், கும்பகோணம், மன்னார்குடி நோக்கிச் செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

மணல்மேடு பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

எனவே மாவட்ட கலெக்டர் மணல்மேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் தேவைக்கேற்ப பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் மயிலாடுதுறை, மணல்மேடு, காட்டுமன்னார்கோவில் வழியாக பஸ் இயக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணல்மேடு பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story