'மேகதாது அணை கட்ட உரிய சட்ட போராட்டம் நடத்தி விரைவில் அனுமதி பெறுவோம்' - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்


மேகதாது அணை கட்ட உரிய சட்ட போராட்டம் நடத்தி விரைவில் அனுமதி பெறுவோம் - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்
x

உரிய சட்ட போராட்டம் நடத்தி மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் பெற கர்நாடக அரசு முயற்சி செய்யும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் 15-ந்தேதி வரை தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மேகதாது அணை இருந்திருந்தால் தற்போது தண்ணீர் பிரச்சினை இவ்வளவு தீவிரமடைந்திருக்காது என்று தெரிவித்தார். மேகதாது அணை மூலம் வறட்சி காலங்களில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக சுப்ரீம் கோர்ட்டிலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முன்வைக்க இருப்பதாக தெரிவித்த அவர், இது தொடர்பான அனைத்து சட்ட போராட்டங்களையும் நடத்தி விரைவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் பெற கர்நாடக அரசு முயற்சி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story