புதிய வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படுமா?

புதிய வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படுமா?
x

காரியாபட்டி பகுதியில் புதிய வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பகுதியில் புதிய வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மின் இணைப்பு

காரியாபட்டி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் எண்ணற்ற பேர் வீடு கட்டி வருகின்றனர். இவர்கள் வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மின் இணைப்பு இல்லாததால் வீடு கட்டுபவர்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி வீடு கட்ட வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்தபகுதியில் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு விண்ணப் பித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

நடவடிக்கை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் மின் வாரியத்திலிருந்து மீட்டர் மற்றும் உபகரணங்கள் வரவில்லை. இதனால்தான் மின்இணைப்பு வழங்க தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.

Next Story