நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

விருதுநகரில் நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகரில் நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீர்நிலைகள்

விருதுநகரின் மையப்பகுதியில் வடமலைகுறிச்சி கிராமத்தில் தொடங்கி குல்லூர்சந்தை வரை தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது கவுசிகமாநதி. மழைக்காலங்களில் இந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்த ஓடிய காலம் பழைய நினைவுகளாகவே போய்விட்டது. தற்போது கருவேலமர ஆக்கிரமிப்பினாலும், கரையோர ஆக்கிரமிப்புக்களாலும் அகண்ட இந்த நதி ஆடுதாண்டும் ஓடையாக மாறிவிட்டது.

அதிலும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நிலையயும் உள்ளது. விருதுநகர் மையப்பகுதியில் ெரயில்வே பீடர் ரோட்டை ஒட்டி வேலாயிமடைஊருணி உள்ளது. இந்த ஊருணிக்கு பேராலி ரோட்டிலிருந்து ெரயில் நிலையம் வழியாக நீர்வரத்து வழி உள்ளது.

நிலத்தடி நீர்மட்டம்

இதேபோன்று இந்த ஊருணியிலிருந்து நகரின் மையப்பகுதியில் உள்ள தெப்பத்திற்கு தண்ணீர் செல்லும் நீர் வழி பாதையும் உள்ளது. ஆனால் நீர்வரத்து வழி ஆக்கிரமிக்கப்பட்டு வேலாயிமடை ஊருணிக்கு நீர் வர வழியில்லாமல் ஊருணி ஆக்கிரமிப்புகளில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஊருணியை தூர்வாரி நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்தால் நகரின் மையப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். காணாமல் போன கவுசிகமா நதியையும், ஆக்கிரமிப்புகளுக்கு நடுவே வறண்டு கிடக்கும் வேலாயிமடை ஊருணியையும் சீரமைக்க உடனே நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் அரசு துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயார் இல்லை. இதனால் விருதுநகர் பகுதிக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்தாய்வு செய்து நகர் மக்களுக்கு பயன்படக்கூடிய இந்த நீர் நிலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன் வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளுடன் கைகோர்த்து நகருக்கு நன்மை பயக்கும் இப்பணியை செய்ய வேண்டியது அவசியமாகும்.


Next Story