சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 21 July 2022 11:17 PM IST (Updated: 21 July 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஒரத்தூர் கிராமம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து கோரையாறு மேற்கு கரை வழியாக மூணாறு தலைப்பு வரை செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக எருமை படுகை, குவளவேலி, சாத்தனூர், கேத்தனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும் தினமும் திரளான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.

சேதமடைந்த சாலை

தற்ேபாது இந்த சாைல ேசதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

1 More update

Next Story