வட்டார ஊராட்சி சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா?


வட்டார ஊராட்சி சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா?
x

வட்டார ஊராட்சி சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா?

திருவாரூர்

6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வலங்கைமான் வட்டார ஊராட்சி சேவை மையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டியே கிடக்கும் ஊராட்சி சேவை மையம்

வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சி கிராமத்தில் பாதிரிபுரம் தெரு உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்காக வட்டார ஊராட்சி சேவை மையம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அலுவலக அறைகள், பொது பயன்பாட்டு கூடம், கழிவறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

பராமரிப்பின்றி கிடக்கும் இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து வருகிறது. மேலும் கட்டிடத்தின் முகப்பு மற்றும் சுற்றுப்புற சுவர்கள் சேதமடைந்துள்ளது. சுற்றுப்புற பகுதிகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் மைதானமாக மாறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வட்டார ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story