மந்தித்தோப்பு பாலத்தில் சாலை அமைக்கப்படுமா?
வத்திராயிருப்பு பகுதியில் மந்தித்ேதாப்பு பாலத்தில் சாலை அமைக்க நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் மந்தித்ேதாப்பு பாலத்தில் சாலை அமைக்க நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைப்பாலம்
வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறைக்கு செல்லும் சாலையில் மந்தித்தோப்பு பகுதியில் தரைப்பாலம் இருந்தது. மழைக்காலங்களில் சதுரகிரி மலையில் பெய்யும் மழைநீர் இந்த தரைப்பாலத்தின் வழியாக இப்பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு செல்வது வழக்கம். இதனால் விவசாயிகள் மற்றும் பக்தர்கள் இந்த பாலத்தை கடந்து செல்ல தவித்து வந்தனர்.
எனவே மழை பெய்யும் காலங்களில் மகாராஜபுரம் வழியாக 7 கிலோமீட்டர் தூரம் சுற்றி விவசாயிகள் மற்றும் சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.
சாலை இல்லை
இதையடுத்து பக்தர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மந்தித்தோப்பு பகுதியில் உள்ள தரைப்பாலத்தினை அகற்றி விட்டு புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு காலம் ஆகியும் தற்போது வரை பாலத்திற்கு இரு புறங்களிலும் சாலை அமைக்காமல் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் சாலையை கடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புகள் இல்லாததால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் சிரமம் இன்றி சென்று வர சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.