குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படுமா?


குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படுமா?
x

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் திட்டப்பணி

விருதுநகர் மாவட்டத்திற்கு 2 ஆண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.3,200 கோடி குடிநீர் வடிகால் வாரிய திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே கடந்த ஆண்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய நகராட்சி பகுதிகளுக்கு நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் கூடுதல் கூட்டு குடிநீர் திட்டப்பணி ரூ.441 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்தும் இன்னும் திட்டப்பணி 60 சதவீதம் கூட முடிவடையாத நிலை உள்ளது. இத்திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளால் உறுதி சொல்ல முடியாத நிலையும் நீடிக்கிறது.

பாதாள சாக்கடை திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகரில் நடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி இன்னும் முழுமையாக முடிவடையாத நிலை நீடிக்கிறது.

இதே போன்று சாத்தூரில் ரூ.68 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டாலும் திட்டப்பணி முழுமையாக முடிவடையவில்லை. ராஜபாளையத்தில் ரூ.251 கோடி மதிப்பீட்டில் பாதான சாக்கடை திட்டப் பணி தொடங்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் நகர் மக்களுக்கு முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது.

காலக்கெடு

குடிநீர் வடிகால் வாரியம் திட்டப்பணி மேற்கொள்ளும் போது குடிநீர் திட்டமானாலும், பாதாள சாக்கடை உள்ளிட்ட வடிகால் திட்டமானாலும் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று உறுதி சொல்ல முடியாத நிலை என்பது நிரந்தரமாகி விட்டது.

எனவே துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்க தனி கண்காணிப்புஅதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story