மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

திருப்பனந்தாள் அருகே மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூர் அண்ணா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் பந்தநல்லூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா நகரில் வசிக்கும் ராதா(வயது60) தனது வீட்டு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ராதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story