கம்பி வளைக்கும் கருவியை திருடியவர் சிக்கினார்
நெல்லையில் கம்பி வளைக்கும் கருவியை திருடியவர் சிக்கினார்
திருநெல்வேலி
நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில், மாநகராட்சி சார்பில் வேடிக்கை பார்க்கும் வியூ பாயிண்ட் கட்டப்பட்டு வருகிறது. பல மாதங்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒப்பந்த ஊழியர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் இரும்பு கம்பிகள், கம்பிகளை வளைக்கும் கருவி உள்ளிட்டவற்றை அங்கு போட்டு வைத்துள்ளனர்.
இங்கு நேற்று இரவு ஒருவர் நைசாக வந்து கம்பியை வளைக்கும் கருவியை நைசாக திருடிக்கொண்டு புறப்பட்டார். இதைக்கண்ட காவலாளி அவரை விரட்டி சென்றார். அப்போது அந்த வழியாக பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் ரோந்து வந்தார். அவர் அந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அவர் மணக்காடு பகுதியை சேர்ந்த செல்லத்துரை (வயது 46) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story