சீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சீதாரம் யெச்சூரிக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. 72 -வயதான சீதாராம் யெச்சூரி கடந்த மாதம் 19 ஆம் தேதி சுவாச தொற்று பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தோழர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலையடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சீதாராம் யெச்சூரி விரைவில் நலம்பெற வேண்டும். மருத்துவர்களின் முயற்சியால் விரைவில் சீதாராம் யெச்சூரி நலம்பெறுவார் என நம்புகிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story