ஊராட்சி தலைவருடன் பெண் வாக்குவாதம்; குடும்பத்துடன் தர்ணா


ஊராட்சி தலைவருடன் பெண் வாக்குவாதம்; குடும்பத்துடன் தர்ணா
x

ஊராட்சி தலைவருடன் பெண் வாக்குவாதம் செய்து குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரைச் செல்வி(வயது 37). இவர் அந்த கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் மாடு கட்டும் கொட்டகை அமைத்து, கடந்த 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது செம்பியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் பூமிபாலன் அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற, மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கு மனு அளித்தார். அதன்பேரில் தற்போது ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டபோது செந்தாமரைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு செந்தாமரைச்செல்வி மற்றும் அவரது 2 மகன்கள், மாமியார் உள்ளிட்ட 4 பேரும் கண்களில் கருப்பு துணி கட்டி அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த வெங்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா தலைமையிலான போலீசார், அங்கு வந்து செந்தாமரைச்செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களுடைய கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் தெரியப்படுத்துவதாக கூறினர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அவர்கள் அந்த இடத்துக்கு பட்டா கேட்டு மனு கொடுத்ததாகவும் ெதரிகிறது. ஏற்கனவே இவர்களுக்கு திருச்சி மாவட்டம், ஆலம்பாடி மேட்டூர் கிராமத்தில் சுமார் 15 சென்ட் பட்டா நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அவர்களுக்கு பட்டா கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரியகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story