10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது
கிருஷ்ணகிரியில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்றதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்றதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கையில் பையுடன் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள மல்லனூரை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 45) என்பதும், கஞ்சா கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
9 பேர் கைது
அதேபோல கஞ்சா விற்ற சோமார்பேட்டை திருமூர்த்தி (23), உள்ளுகுறுக்கை சிராஜ் (30), ஜெகதேவி யூசுப் (44), கிருஷ்ணகிரி ராசுவீதி மணிகண்டன் (20), மத்திகிரி பேளகொண்டப்பள்ளி அருகே கலுகொண்டப்பள்ளி கங்காதரன் (22), தேன்கனிக்கோட்டை தேவனப்பள்ளி அர்ஜூன் (23), கெத்தள்ளி சீனிவாசன் (34), கெலமங்கலம் அசோக்குமார் (23), மாரல்வாடி நரசிம்மன் (42), ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.