குண்டர் சட்டத்தில் பெண் கைது


குண்டர் சட்டத்தில் பெண் கைது
x

திருச்செங்கோடு வழியாக காரில் கஞ்சா கடத்திய கோவையை சேர்ந்த பெண்ணை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்

காரில் கஞ்சா

திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காரின் உரிமையாளர் கோவையை சேர்ந்த சர்மிளா பேகம் (வயது41) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் கைது

இதற்கிடையே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். போலீசாரின் பரிந்துரையை ஏற்று, சர்மிளா பேகத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story