வக்கீலுக்கு கொலை மிரட்டல்; பெண் கைது


வக்கீலுக்கு கொலை மிரட்டல்; பெண் கைது
x

வெண்ணந்தூர் அருகே வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அருகே உள்ள மின்னக்கல் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 54). இவர் ராசிபுரம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் அடிதடி வழக்கு சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த பூபதி, அவரது மனைவி காயத்ரி ஆகியோருக்கு ஆதரவாக ஆஜரானார். இந்தநிலையில் எதிர் தரப்பை சேர்ந்த மின்னக்கல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினவேல் மனைவி கல்பனா கடந்த 7-ந் தேதி ரகுபதி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரிடம் இந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவோம் என அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வக்கீல் ரகுபதி வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனாவை கைது செய்தனர்.


Next Story