ஆட்டோவை தீ வைத்து எரித்த பெண் கைது


ஆட்டோவை தீ வைத்து எரித்த பெண் கைது
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கடன் தகராறில் ஆட்டோவை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கடன் தகராறில் ஆட்டோவை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடன்

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவர் அதேபகுதியை சேர்ந்த துணிக்கடை ஊழியர் விஜி என்ற அந்தோணியம்மாள் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் அவர் 2 தவணைகளாக ரூ.15 ஆயிரத்தை அந்தோணியம்மாளிடம் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மீதம் உள்ள கடன்தொகை ரூ.10 ஆயிரத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக செந்தில்குமாருக்கும், அந்தோணியம்மாளுக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது. மேலும் இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ பிடித்து எரிந்த ஆட்டோ

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செந்தில்குமார் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். நேற்றுமுன்தினம் அதிகாலையில் அவரது ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அவர், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவர் அந்த ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.

இந்த தீ விபத்தில் அந்த ஆட்டோ எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து செந்தில்குமார் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ரூ.25 ஆயிரம் கடன் பிரச்சினையில் ஆட்டோவை அந்தோணியம்மாள் தீ வைத்து எரித்து இருக்கலாம் என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

பெண் கைது

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை தீ வைத்து எரித்ததாக அந்தோணியம்மாளை கைது செய்தனர். ரூ.25 ஆயிரம் கடன் பிரச்சினையில் ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story