ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது
ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது
கோவை
கோவை காந்திபுரத்தில் இருந்து பூமார்க்கெட்டிற்கு சந்திரா என்ற பெண் அரசு பஸ்சில் சென்றார். பஸ் பூமார்க்கெட்டை அடைந்த போது தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க நகையை காணததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்ததுடன், பஸ்சில் தன்னுடன் பயணம் செய்த ஒரு பெண் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் 2 பவுன் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் பழனியை சேர்ந்த வடிவேலு என்பவரின் மனைவி சத்யா (32) என்பது தெரியவந்தது. இவர் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.