நிலத்தகராறில் வீடு புகுந்து பெண் அடித்துக் கொலை - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்


நிலத்தகராறில் வீடு புகுந்து பெண் அடித்துக் கொலை - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
x

நிலத்தகராறு காரணமாக வீட்டில் தனியாக இருந்த பெண் கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளித்தாய். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மகன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்ததால் தனியே வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் வள்ளித்தாய்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கையா என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் விரக்தியில் இருந்த செங்கையா வீட்டில் தனியாக இருந்த வள்ளித்தாயை கம்பால் அடித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டினுள் வள்ளித்தாய் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவாக இருந்த செங்கையாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

1 More update

Next Story