பணகுடியில் வாலிபர் அடித்து கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பணகுடியில் வாலிபர் அடித்து கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பணகுடியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி


பணகுடியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலையை சேர்ந்த ராமன் என்பவர் மகன் பசுபதி(வயது23). பணகுடியில் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு போகும் வழியில் பசுபதி மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த பசுபதியை சிவகாமி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பாழடைந்த வீட்டில் வைத்து மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இன்று காலை அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்துள்ளது தெரியவந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story