காயல்பட்டினம் சிங்கித்துறையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காயல்பட்டினம் சிங்கித்துறையில், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சிங்கித்துறையில், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனவர்
காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த ராயப்பன் மகன் வியாகுலம் (வயது 45). மீனவர். இவருக்கு சுகந்தி (38) என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்களும் உள்ளனர். வியாகுலம் கடலில் மீன் பிடித்து தொழில் வருகிறார்.
வியாகுலம் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். மீன்பிடித்து விட்டு காலை சுமார் 11 மணியளவில் கடற்கரைக்கு திரும்பினார்.
தூக்கில் தொங்கினார்
பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் வழிமறித்து, 'உனது மனைவி, வீட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக' தகவல் கொடுத்தனர்.
பதறிப்போன அவர் வீட்டிற்கு சென்றபோது சுகந்தி புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுதொடர்பாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியோடு சுகந்தியை கீழே இறக்கி காயல்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
காரணம் என்ன?
இதுதொடர்பாக வியாகுலம் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சென்று சுகந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகறிார்கள். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.