பொள்ளாச்சியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பொள்ளாச்சியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் கட்டிட மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்து ராதிகா (வயது 25). இவர்களுக்கு சாய் ஆதித்யா (4) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு முத்து ராதிகா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் கணவர் எழுந்து பார்த்த போது முத்து ராதிகா வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற முத்து ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.