திருவள்ளூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருவள்ளூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூரை அடுத்த சின்ன ஈக்காடு சம்பத் நகரை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 32). வக்கீல். இவருக்கு அகிலா (31) என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அகிலா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் எழுந்த அகிலா தன்னுடைய அறைக்கு சென்று அங்கு மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story